திங்கள், 28 ஜனவரி, 2013

தகவல் பெறுவதற்கான விண்ணப்ப மாதிரி


தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி தகவல்களைக் கேட்டுப் பெறுவதற்கு தனியாக விண்ணப்பப்படிவம் ஏதும் கிடையாது. எனினும் ஒரு வெள்ளைத் தாளில் கீழ்கண்ட மாதிரி எழுதி விண்ணப்பிக்கலாம். இதைக் கேட்கும் தகவலுக்கேற்ப மற்றும் சூழலுக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்.

அனுப்புநர்

(விண்ணப்பதாரரின் பெயரும், முகவரியும் குறிப்பிடவேண்டும்)

பெறுநர்

(உரிய அலுவலகத்தின் பொதுத்தகவல் அலுவலர்/ உதவி பொதுத்தகவல் அலுவலர் முகவரி குறிப்பிடப்பட வேண்டும்)

ஐயா/அம்மையீர்,

தயவு செய்து கீழ்க்கண்ட தகவல்களை கொடுக்கவேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

தகவல் விவரம்

2. நான் கீழ்கண்ட ஆவணங்களை பார்வையிட அனுமதிக்க வேண்டுகிறேன்.

( பார்வையிட விரும்பும் ஆவணங்கள் )

3. எனக்கு கீழ்கண்ட ஆவணங்களின் படிகளை கொடுக்குமாறு வேண்டி

கேட்டுக்கொள்கிறேன்.

(ஆவணங்களின் விவரம்)

4. நான் தகவல் அறியும் கட்டணங்கள் செலுத்தியுள்ளேன், அதன் விவரங்கள் கீழ்வருமாறு

கட்டணம் செலுத்தியதற்கான சான்றுகளை இணைத்துள்ளேன்.

5. எனக்கு மேற்கண்ட தகவல்கள் / ஆவணங்கள் அவசரமாக தேவைப்படுகின்றன. விரைவில் எனக்கு

கொடுக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இடம்

நாள்

விண்ணப்பதாரர் கையொப்பம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் அறிவோம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் அறிவோம்

படித்ததில் பிடித்தது, அரசியல், tamil essays, tamil articles, tamil nadu articles, tamil katturaigal, tamilnadu politics articles, tamil katturaigal
 
 கவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி பெரும்பாலான தமிழக மக்களுக்கு தெரிந்திருக்கக் கூடும். ஆனாலும் அந்தச் சட்டத்தால் என்ன பயன் என்றும் அந்தச் சட்டத்தை எப்படி பயன்படுத்துவது என்றும் – வழக்கறிஞர் திரு. கிறிஸ்டோபர் அவர்கள் விளக்கம் அளித்தார். அவ்விளக்கம்:
ரசு அலுவலகங்கள் பொது மக்களுக்கு தகவல் சொல்லக் கடமைப்பட்டிருந்தாலும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன் நீங்கள் கேட்கும் தகவலை அவ்வளவு எளிதில் பெற இயலாது. நீங்கள் தகவல் கேட்டு அனுப்பும் கடிதம் குப்பைக் கூடைகளுக்குச் கூட செல்லும் வாய்ப்பு இருந்தது. ஆனால் 2005 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு பொதுமக்கள் கேட்கும் தகவலைத் தர மறுத்தால் அரசு ஊழியர் சட்டத்தை மீறியவராகக் கருதப்படுவார். அவருக்கு தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தால் தகவல் கிடைக்கும் வாய்ப்பு உறுதியாகிறது.
ந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி மத்திய மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிதி பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து நீங்கள் அறிய விரும்பும் தகவலைப் பெறலாம். தனியார் நிறுவனங்களுக்கு இச்சட்டம் பொருந்தாது.
விண்ணப்ப மனு ஒரு வெள்ளைத் தாளில் கைகளால் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம் அல்லது தட்டச்சு செய்து கொள்ளலாம். மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள நீதிமன்ற வில்லையை ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாகக் கொடுக்க வேண்டும். இந்த நீதிமன்ற வில்லைகள், முத்திரைத்தாள் முகவர்களிடம் கிடைக்கும். நீதிமன்ற வளாகங்களிலும் கிடைக்கும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத் தகவல் அதிகாரியின் ( PIO ) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்னென்ன தேதி, இடம், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல் மற்றும் கைப்பேசி எண் , மின்னஞ்சல் முகவரி ( இவை இரண்டும் கட்டாயமில்லை ) ஆகியவைகள் இடம் பெற வேண்டும்.
னுவில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்க வேண்டும். நம்முடைய முகவரியும் உண்மையானதாக இருக்க வேண்டும். மனுக்களை நேரிலோ அல்லது பதிவுத் தபாலிலோ அனுப்பலாம். தூதஞ்சல் (courier) மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும். மனுக்களை அனுப்பும் முன்பு நகல் எடுத்து வைத்துக் கொண்டு அனுப்பிய பிறகு அஞ்சல் முத்திரையுடன் கூடிய ஆதாரச் சீட்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவேண்டும்.
 வெளி நாடுகளில் வாழ்வோர் தங்களின் மனுக்களை தாங்கள் வசிக்கக் கூடிய அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்களில் அதற்குண்டான முத்திரைக் கட்டணத்தை செலுத்தி தாக்கல் செய்யலாம்.

 பொதுத் தகவல் தொடர்பு அதிகாரியிடமிருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய சாதாரண தகவல்கள் 30 நாட்கள் கால அவகாசத்தில் கிடைக்க வேண்டும். தனி மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களாக இருப்பின் 2 நாட்கள் கால அவகாசத்தில் கிடைக்க வேண்டும். ஒரு நபரின் உயிர்ப் பாதுகாப்பு பற்றிய செய்தியாக இருந்தால் 48 மணி தகவல் நேரத்தில் தர வேண்டும்.
நமது மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் நாம் மேல்முறையீடும் செய்து கொள்ளலாம். உரிய காலத்திற்குள் நாம் கோரிய தகவல்கள் மற்றும் தகவல்களின் நகல்கள் வேண்டும் என்றால் பக்கத்திற்கு ரூ 2 வீதம் செலுத்த வேண்டும்.
சாமானிய மக்கள் தாங்கள் அறிய விரும்பும் தகவல்களை உடனே தெரிந்துகொள்ள கொண்டுவரப்பட்டதே இந்தச் சட்டம். இந்தச் சட்டத்தின் மூலம் மக்கள் ஆட்சியின் மகத்துவம் உணர்த்தப்படுகிறது. நீங்கள் கேட்கும் தகவலைத் தர கடமைப்பட்டுள்ள அதிகாரிகள் உரிய பதிலைத் தர மறுத்தால் அவர் மீது வழக்குத் தொடுக்கலாம். இந்தச் சட்டத்தின் வழி பொதுமக்களுக்கு பல தகவல்களைப் பெற்றுத் தர தொண்டு நிறுவனங்கள் களப் பணி ஆற்றிவருகின்றன. இவைகளின் மூலமும் நாம் அறிய விரும்பும் தகவலைப் பெறலாம். எனவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தி பலன் பெறுவோம்.

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

friends

hard disk

HARD DISK -ஐ பாதுக்காப்பதுஎப்படி?
உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும்போது, ஏதாவது பிரச்சினைகளினால ் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அப்படி செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போல பல காரணங்களினால் உங்கள் hardDisk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும்.
மனிதன் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கொடுத்துதீர்வு செய்யலாம். இதற்கு என்ன செய்ய முடியும். எனவே வரும்முன் காப்பதே சிறந்தது. அதற்குத்தான் check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும்.
இதன் மூலம் உங்கள் Hard Disk இன் Critical நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால்உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்புகள் உள்ளது.
இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள்ளும் நேரம் கிட்டதட்ட ஒரு மணி நேரம். கூட குறைய இருக்கலாம். இந்த சமயத்தில் உங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஆனால் இதை செய்வதன் காரணமாக உங்கள் Hard Disk பாதுகாப்பாக இருக்கும். மிக அதிக நேரம் இயங்கும் கம்ப்யூட்டர் என்றால் மாதம் ஒரு முறையாவது Check Disk செய்து கொள்ளுங்கள்.
எப்படி செய்வது எனக் காண்போம் வாருங்கள்.
1.My Computer உள்ளே நுழைந்து C Drive மீது Right Click செய்து Properties செல்லவும்.
2.அடுத்து வரும் குட்டி விண்டோவில் Tools என்ற Tab ஐ தெரிவு செய்யவும். இதில் Error Check என்பதில் “Check Now” என்பது இருக்கும். அதை கிளிக் செய்யவும்.
3.இதில் முதலாவது எப்போதும் கிளிக் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இது System Error களை கண்டறிந்து Automatic ஆகசரி செய்து விடும். இரண்டாவது ஒன்று உங்கள் Disk இன் Bad Sector களை scanசெய்து அவற்றை நல்ல நிலைக்கு Recovery செய்யும். இந்த இரண்டாவது option சேர்த்து click செய்தால் Check Disk க்கு மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒன்று. நேரம் ஆனாலும் இதையும் செய்வது நலம்.
4.இப்போது கிளிக் செய்து விட்டு Start என்பதை கொடுக்கவும். இப்போது அடுத்த Window வரும்.
உங்கள் C Drive தான் உங்கள் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டுள்ளது எனவே இதனை இப்போது செய்ய முடியாது எனச் சொல்லி, அடுத்த முறை கம்ப்யூட்டர் Start ஆகும் போது செய்யவா எனக் கேட்கும். அதற்கு வட்டமிடப்பட்டுள ்ளதை கொடுத்து விடவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரை Restart செய்யவும். இப்போது Check Disk வேலைகள் ஆரம்பிக்கும்.
5.இந்த வேலை முடியும் வரை கம்ப்யூட்டர் OFF ஆகக் கூடாது எனவே சரியான நேரத்தில் இதை செய்யுங்கள்.மோச மான பகுதிகளை கம்ப்யூட்டர் BadSector என்று முடிவு செய்துகொள்ளும், இதனால் பிரச்சினை எதுவும் இல்லை. இது முடிந்தவுடன் உங்கள் Hard Disk இன் பிரச்சினைகள்சரி செய்யப்பட்டு விடும். உங்கள் Hard Disk குறித்த விவரங்கள் Check Disk முடிந்த உடன் காண்பிக்கப் படும்.
6.மற்ற Drive களை Check Disk செய்யும் போது அது கம்ப்யூட்டர் ON ஆகி இருக்கும் நேரத்திலயே செய்ய முடியும். ஆனால் C ட்ரைவை (அல்லது நீங்கள் OS இன்ஸ்டால் செய்துள்ள ட்ரைவ் ) Check Disk க்கு உள்ளாக்குவதுதான ் Hard Diskக்கு பயனுள்ளது.
உங்கள் Hard Disk ஐ பரமரிப்பது உங்கள் கடமை. எனவே முதலில் chkdsk (check Disk )செய்யுங்கள். உங்கள் Hard Disk ஐ காப்பாற்றுங்கள் ...!